Welcome to Ganesan's world

"...show me your ways, O Lord, teach me your paths; guide me in your truth and teach me, for you are my Savior, and my hope is in you all day long..."

Sunday, July 02, 2006

My Tamil Poems

நச்சுப் பாம்பு

நண்பன் என்று நினைத்தேன்
நட்புக்கரம் நீட்டினேன்
அவன் என்னை நச்சுப் பாம்பாய்
கொத்திவிட்டான்
ஏன் கொத்தினான் என்று
விளங்கவில்லை
கொத்தும் அளவிற்கு அவனுக்கு
என்ன தீங்கு செய்தேன்?
இது தான் கெட்ட வேளை என்பதோ?

________________________________________________
பாசம்

-----------------------------------------------

என் இதயத் துடிப்புக்கள்
தமிழில் இயங்குகின்றன

என் சுவாசப் பைகள்
தமிழை சுவாசிக்கின்றன

என் கண்கள் அந்நிய நாட்டிலும்
தமிழரை உடன் கண்டு கொள்கின்றன

என் கரங்கள் நேசக் கரங்களாக
அவர்களை நோக்கி தன்னிச்சையாக
நீளுகின்றன

என் கால்கள் தாயகம் செல்ல
துடிக்கின்றன

தமிழின்மீது எனக்கு ஏன் இந்த பாசம்?

ஒரு குழந்தைக்கு அதன் தாயின் மீது
மீது உள்ள பாசத்தை அளவிடமுடியாது
வார்த்தைகளால் வருணிக்க முடியாது

வாழ்க தமிழ்! வளர்க தமிழகம்!

____________________________________________
கண்ணாடி

--------------------------------------------

கண்ணாடியில் பார்த்தேன்
அதிர்ந்தேன்
எப்போது நான்
பெண்ணானேன்?

என்னுளிருந்து வந்த
நகையொலியால்
உணர்ந்தேன்

நீ என்னுள் இருப்பதால்
நான் நீயாகத் தெரிகிறேன்

_____________________________________________
நீ ஒரு டாக்டர் எனக்கு

---------------------------------------------
புகை விட்டு புகை விட்டு

புரையோடி இருந்த எனக்கு

புன்னகை என்ற கதிர் வீச்சால்

புத்துயிர் கொடுத்தாய் நீ


காயம் பட்ட என் இதயத்திற்கு

களிம்பாக வந்தாய் நீ


தோல்விகளால் துவண்டிருந்த எனக்கு

தோள் கொடுத்து டானிக் ஊட்டினாய் நீ

அதனால் நீ ஒரு டாக்டர் எனக்கு

நான் இப்போது ஆப்பிள் சாப்பிடுவதில்லை ஏனென்றால்

An apple a day keeps doctor away

__________________________________________________
நான் அஞ்சுகிறேன்

--------------------------------------------------
நான் அஞ்சுகிறேன்
எங்கே நீ என்னை விட்டுச்
சென்று விடுவாயோ என்று

நான் அஞ்சுகிறேன்
நீ சென்ற பின் நான்
தனிமையில் வாடுவேன் என்று

நான் அஞ்சுகிறேன்
உன் நினைவுகள் என்னை
வாட்டுமோ என்று

நான் அஞ்சுகிறேன்
உன்னை மறக்க குடி போதையில்
அழிந்து போவேனோ என்று

அதனால் உன்னை என்னுடன் இணெத்து
ஒரு கால்கட்டு போடு

________________________________________________
புலம்பலுக்கு பதில்

------------------------------------------------
I had put a poem from web and titled it
'pulam peyarnthavarin pulambal'.
I do agree with some of the things in that
as an NRI myself. But, thinking on the
positive side here is my reply poem.

வெய்யிலில் வாடி
வேர்வையில் குளித்து
தாகத்தால் நா வரண்டு
ராத்தூக்கம் கெட்டு
வாழ விரும்புகிறாயா

எப்போதும் குளிராக
என்றும் ஊட்டி கொடைக்கானல் போல
புழுதி இல்லாத நாட்டில்
வாழ விரும்புகிறாயா

வீடு வாங்க வேண்டுமா?
கார் வாங்க வேண்டுமா?
கத்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம்
கடனை அடைக்கும் கவலை வேண்டாம்

செட் தோசை கெட்டி சட்னி இங்கும் கிடைக்கும்
தமிழ் நண்பர்கள் இங்கும் இருக்கிறார்கள்
தமிழ் சினிமா இங்கும் உண்டு
கோயில் மசூதி சர்ச் கள் இங்கும் உண்டு

பிறந்த நாட்டில் தகுதிக்கேற்ற வேலை இல்லை
இங்கோ தகுதிக்கேற்ற வேலை
வேலைக்கேற்ற ஊதியம்
நம்மவர்களே நம்மை கொத்தடிமைகளாக
நடத்தும் கொடுமை இல்லை

இன்னும் பிற நண்மைகள் இங்கு உண்டு
ஆகவே யோசி எதை நீ விரும்புகிறாய்?
_______________________________________________


சகலகலாவல்லி

-------------------------------------------------
நளினமான உனது நடையைப் பார்த்தால்
நீ ஒரு பரத நாட்டிய கலையரசி

குயிலினும் இனிமையான உனது குரலைக் கேட்டால்
நீ ஒரு சிறந்த பாடகி

என் இதயத்தை சிக்க வைக்கும் கோலம் போடும்
நீ ஒரு சிறந்த வரைபட கலையரசி

கண்களால் கவிதை பாடும்
நீ ஒரு கவிதாயினி

என்னைக் கண்டும் காணாதது போல் இருக்கும்
நீ ஒரு தேர்ந்த நடிகை

மொத்தத்தில் நீ ஒரு சகலகலாவல்லி

________________________________________________

மலரும் நினைவுகள்

மலரும் நினைவுகள்
(பழய சினிமா பாடல்களுடன்)

அலுவலகம் செல்ல பஸ் நிலையத்தில்
காத்து நின்றேன்

கல்லூரி செல்ல தோழியுடன் நீ
அங்கு வந்தாய்

உன் நடையைப் பார்த்து நான்
'ஆஹா மெல்ல நட மெல்ல நட
மேனி என்னாகும்' என்று மனதுக்குள் பாடினேன்

தோழியுடன் பேசிய உன் பேச்சைக் கேட்டு
'பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா'
என்று மனதுக்குள் பாடினேன்

கனத்த புத்தகங்களை நீ சுமந்ததைப் பார்த்து
'உங்க பொண்ணான கைகள் புண்ணாகலமா
உதவிக்கு வரலாமா' என்று மனதுக்குள் பாடினேன்

நான் உன்னை ஸைட் அடிப்பதை காண சகிக்காதவர்கள்
பஸ் நிலையத்தில் என்னை முறைத்த போது
'மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல்
கூடுமோ' என்று மனதுக்குள் பாடினேன்

திடீரென்று நீ உன் திருமணப் பத்திரிகையை
உன் தோழியிடம் கொடுத்த போது
என் ஒரு தலை ராகத்தில் இடி விழுந்தது
அப்போது 'எங்கிருந்தாலும் வாழ்க' என்று
என்று மனதுக்குள் பாடினேன்

அந்த சமயத்தில் நீ போகும் பஸ் வர
என்னை அறியாமல் நானும் ஏறப் போக
'கண் போன போக்கிலே கால் போகலாமா'
என்ற பாட்டு என்னை தடுத்தது

இறுதியாக நான் செல்லும் பஸ் வர
'காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்'
என்று மனதுக்குள் பாடிக்கொண்டு அலுவலகம்
சென்றேன்
______________________________________________

காதல் நோயா? புற்று நோயா?

----------------------------------------------
உன் நினைவால்
ஊண் உறக்கம் இன்றி
உடல் மெலிந்தேன்

உன்னிடமிருந்து தபால்
வராததால் தலை
முடியை பிய்த்ததில்
முடி உதிர்ந்தது

பஸ் நிலையத்தில்
உன்னிடம் டாவு அடித்த
பையனை நினைத்து பல்லை
கடித்ததில் பல்லில் இருந்து
ரத்தம் வருகிறது

உடல் மெலிந்து முடி கொட்டி
பல்லில் ரத்தம் வரும்
என் நிலை புற்று நோய்க்கான
அறிகுறிகள் என்கிறார்கள்

எனக்கு காதல் நோயா? புற்று நோயா?
டாக்டரான நீ தான் என்னை
குணப்படுத்த வேண்டும்

____________________________________________

காதல் கவிதை

----------------------------------------------
காதலிப்பது சாதாரணம்
காதலில் வெற்றி அடைவது அசாதாரணம்

நீ காதலித்த பெண்ணுடன் வாழ்வது சாதனை
நீ காதலிக்காத பெண்ணுடன் வாழ்வது சோதனை

உன்னை காதலிக்கும் பெண்ணுடன்
வாழ்வது வாழ்க்கை

______________________________________________

இறந்தவன்

----------------------------------------------
(This is not a poem on SWN administrator)

Just because I have written in first person
this does not refer me also. This is just
an imagination.

பஸ் நிலையத்தில் உன்னைக் காண
தவமாய் தவமிருந்து
கால்கள் முடமாகி விட்டன

உன் வரவை எதிர் பார்த்து
அலைந்த கண்கள்
பழுதடைந்து விட்டன

உன் சொல்லைக் கேட்காத காதுகள்
மந்தமாகி விட்டன

நீ இல்லாமல் வாழும் வாழ்க்கையை
நினைத்து நினைத்து
என் இதயம் நின்று விடும் போலிருக்கிறது
ஆகவே நான் இருந்தும் இறந்தவன்

______________________________________________
ஏன் மறந்தாய்?

----------------------------------------------
உன்னையே நினைத்து நினைத்து
ஊர் உறவு சாதி சனம் மறந்தேன்

உன்னையே நினைத்து நினைத்து
உயிருக்குயிரான நண்பர்களை மறந்தேன்

உன்னையே நினைத்து நினைத்து
நான் என்னையே மறந்தேன்

நீயோ என்னை நினைக்க மறந்தாய்
ஏன் மறந்தாய்?

____________________________________________

என் செல்லம்

-------------------------------------------
குழந்தை பருவத்தில் நான்
பெற்றோர்களுக்கு செல்லம்

பள்ளிப் பருவத்தில் நான்
ஆசிரியர்களுக்கு செல்லம்

கல்லூரிப் பருவத்தில் நான்
தோழர்களுக்கு செல்லம்

இன்றோ நான் யாருக்கும்
செல்லம் கிடையாது
நீ தான் எனக்கு செல்லம்

________________________________________

நட்பின் இலக்கணம்

----------------------------------------
நண்பா நாம் சிறுவர்களாக
இருந்தபோது
மாங்காய் தோட்டத்தில் திருடி
எனக்காக நீ உதை வாங்கினாய்

கல்லூரியில் பல தடவைகள்
எனக்காக பிராக்ஸி கொடுத்து
என்னைக் காப்பாற்றினாய்

கல்லூரி விடுதியில்
உன் சட்டையை நான் அணிவேன்
என் சட்டையை நீ அணிவாய்
இருவர் சட்டைகளையும்
நீயே துவைப்பாய்

என் காதலிக்கு கொடுத்த
கடிதத்தை சேர்க்க
பெண்கள் கல்லூரி விடுதிக்கு சென்று
பிடிபட்டு அவமானப்பட்டாய்

இன்று உன் காதலி என் மனைவி
ஆகப்போவதை தெரிந்து
எனக்காக நீ விட்டு கொடுக்கிறாய்

நீ அன்றோ நட்பின் இலக்கணம்

குறிப்பு: யாராவது உன்னை Dumb Friend
என்றால் பொருட் படுத்தாதெ

_________________________________________
Naanum Neeyum

------------------------------------------
Ithu ennudaya kavitahi illai. Naan rasitha
kavithai. Nanri: Jeyabhaskaran


நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்
அடக்கமாக எனக்குப் பின்னால்
நின்றுகொண்டிருப்பாய் நீ

உன் இனத்துக் கற்புக்கரசிகளைச் சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்
என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல்
தெரிந்தும்
அமைதியாக இருப்பாய் நீ

நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய
சொல்லிக் கொள்வதில்லை நான்
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாக வேண்டும் நீ

எனக்குப் பிறகு என் நினைவுகளோடு
வாழவைக்கிறார்கள் உன்னை
உனக்குப் பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை

நானும் ஒரு குழந்தை

------------------------------------------
புலம் பெயர்ந்து
எங்கும் புதினமாய்
காட்சியளிக்கும் நாட்டை
அகலக் கண்கள் விரித்துப்
பார்க்கும் நானும் ஒரு குழந்தை

கள்ளம் கபடு அற்ற
மனிதர்களிடையே
நானும் ஒரு குழந்தை

உன் மடியில்
தவழ ஆசைப்படும்
நானும் ஒரு குழந்தை

_____________________________________-



நான் இங்கு தான் இருக்கிறேன்

---------------------------------------
காதலி என்னைப் பார்
நமது இடைவெளிகள் குறைந்தவிட்டன
நான் இங்கு தான் இருக்கிறேன்
உன் அருகில் தான் இருக்கிறேன்

எத்தனை கஷ்டங்கள்
எத்தனை நிர்பந்தங்கள் இருந்தும்
நான் இங்கு தான் இருக்கிறேன்
உன் அருகில் தான் இருக்கிறேன்

உன்னால் மறைக்க முடியாத
ரகசியங்கள் நான்
உன்னால் மறக்க முடியாத
அனுபவங்கள் நான்
கேட்க முடிந்தால் கேட்டுப்பார்
உன் இதயத் துடிப்பின் வார்த்தைகளை
அவை சொல்லும்

நான் இங்கு தான் இருக்கிறேன்
உன் அருகில் தான் இருக்கிறேன்

உன் இதயத்தில் நான் உலவுவதைக் கண்டு
ஏன் அஞ்சுகிறாய்
நான் உன் இதயத்தின் குரல் தானே
நீ எங்கு என்னைத் தேடுகிறாய்
நான் இங்கு தான் இருக்கிறேன்
உன் அருகில் தான் இருக்கிறேன்

_________________________________________

0 Comments:

Post a Comment

<< Home